''ஞானவள்ளல் பரஞ்ஜோதி மகான் அவர்களின் பொன்மொழிகள் சில ''

1."என் இருதய மலரே மலர்களே"
" நடந்ததெல்லாம் பெரும் நன்மைக்கே சந்தோஷம் "

2.உருக்கமும் உணர்தலும் விசுவாசமும் உணர்வும் இருந்தால்
தொல்லையும் நோயும் தானே விலகும்.

3.ஒழுக்கத்திலும் விவேகத்திலும் உயர்ந்திருப்பதே
மனிதனின் உயர் நிலையாகும்.

4. உடலுக்குத்துணை பூமி
குடும்பத்திற்குத் துணை பொறுமை
அறிவிற்குத்துணை அன்பும் பயிற்சியும்
அருளுயிற்குத் துணை குரு.

5.எத்தீங்குடையோரையும் தீங்குடையோர் என்று நினையாத நம் நெஞ்சத்தால் எவர் தீங்கும் நமக்கு தீங்களிக்காததோடு எத்திங்குடையோரையும் அத்தீய செயலில் இருந்து விலக்கும்.

6. அறிவை அறியாமை வெல்லாமல் அறிவால் அறியாமையை வெல்க.

7.தன் அறிவு தன் எதிரிலுள்ள எல்லாவற்றையும் அறிய முற்படும் அதே அறிவு தன்னை அறிய மட்டும் மிக அஞ்சும் தன் அறிவால் தன்னை அறிந்தால் அவனே ஈசன்.

8.அறிவை அறிந்தோர் அன்பை மறவார் பொருளை அறிந்தோர் புகழை விரும்பார் கருவை அறிந்தோர் கடவுளை நாடார்.

9.ஈசனே மனிதனாகிறான் மனிதனான ஈசனே தன் உயர்ஞானத்தால் தன்னை அறிவான்.

10.உயிருக்குத் தாய் தந்தை
உடலுக்கு மனைவி கணவன்
அன்புக்கு காதலி காதலன்
அறிவுக்கு அனுபோக குரு.

வரவேற்றல்;

மதச்சமய சார்பற்ற ஞான நேர்வழி விளக்கமும்
தன்னிலை பேறின்பமும் பெறவாரீர் உலகீர்
உலகமும் உலக அனுபோகம் 'யாவும்' சந்தர்ப்பமே
நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பேறின்ப ஞான
நல்வாழ்வு வாழவாரீர். உலகீர்......

''நடந்ததெல்லாம் பெரும்நன்மைக்கே சந்தோஷம்''