குருபிரான் மெய்ஞான அருளாளர் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பும் மகான் அவர்களின் தரிசனமும்

குருபிரான் மெய்ஞான அருளாளர் அவர்கள் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் 1933ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் நாள் மெய்திரு ஷேக்முகைதீன் ரொகயாபிவி தம்பதியர்க்கு மூன்றாவது மகனாக அவதரித்தார்கள்.

அருளாளர் அவர்கள் இளமை பருவம் முதல் இறை பக்தியில் மிக நாட்டம் உடையவராய் அனைவரிடத்திலும் அன்பும் அரவணைப்பும் பரிவும் உள்ளவராய் கற்பனைகளைக் களைந்து உண்மை அறிவதில் ஆராய்ச்சியுடையவராய் பலவகை தொழில்களை மேற்கொண்டதில் மிக புகழுடையவராய் விளங்கினார்கள்.

குருபிரான் அவர்கள் தமது குருநாதரின் நல்லாசிபடி 03.10.1974ம் ஆண்டு ராணி ஷம்ஷாத் பேகத்தை திருமணம் செய்துகொண்டார்கள்.01.09.1984ம் ஆண்டு முர்ஷிதா பேகமும் 02.06.1986ல் முனீரா பேகமும் பிறந்தனர். முர்ஷிதா பேகம் மலர்ந்தது முனீராபேகம் மறைந்தது.

நான் பிறந்த ஊரான உடையார்பாளையத்தில் மகான் அவர்களை நேரில் தரிசிக்கும் வாய்ப்பைப் பெற்றேன் என்னை அன்போடு அழைத்து ஞான உபதேசம் தந்து ஆசிவழங்கினார்கள்.


1960ம் ஆண்டிற்குப்பின் மகான் அவர்களோடு மிக நெருக்கமுள்ள முக்கிய சிஷ்யனாக தொடர்ந்து 07.01.1981--20 ஆண்டுகள் அவர்களின் இறுதி நாள்வரை மகானுக்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்றிருந்தேன். அதனால் நல்ல ஞான அனுபவம் பெறப்பட்டேன்.

07.01.1981 மகான் அவர்களின் ஐக்கியத்திற்குப்பின் குருமகான் அவர்களின் ஞாபகமாக அடிக்கடி திருவலஞ்சுழி சபைக்கு வந்து போய்க்கொண்டிருந்தேன்.

மகான் அவர்கள் கடைசியாக திருவலஞ்சுழி சபையை விட்டு 01.01.1981 அன்று காலை 8.20க்கு பாண்டிச்சேரிக்கு ரயில் மூலம் செல்ல பயணமானார்கள். அப்போது சபைகேட்டிலிருந்து கார் திரும்பும் போது காரை சற்று நிறுத்தச்செய்து சபை அடுத்து கீழ்புரமாக உள்ள 18 அடி அகலமும் 250 அடி நீளமுள்ள காடாய் கிடந்த இடத்தைக்காட்டி நீ இங்கே வந்துவிடப்பா என்றார்கள்.
என் சொந்த ஊரில் எல்லாவசதியும் இருக்கிறது.இங்கு எனக்கு என்ன வேலை இருக்கிறது என்றேன். அதற்கு இங்கு உனக்கு நிறைய வேலை இருக்கிறது. இங்கு வருகிறேன் என்று வாக்குகொடு என்று சொல்லி நான் வந்துவிடுவதாக வாக்களித்தேன்.

இந்த ஞாபகம் என்னை அடிக்கடி ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தது.1986ம் ஆண்டு மகான் அவர்களின் ஞானஉதய தின விழா திருவலஞ்சுழியில் நான் முன்நின்று சிலர் ஆதரவோடு மிக சிறப்பாக நடத்தினேன்.விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைவரும் மகிழ்ந்தார்கள் மகான் அவர்களின் ஐக்கியத்திற்குப்பின் திருவலஞ்சுழியில் விமர்சையாக விழா கொண்டாடியதில் எல்லோரும் உற்சாகமடைந்தார்கள்.

அப்போது என்னில் ஓர் எண்ணம் தோன்றியது மகான் அவர்களின் மூன்று விழாக்களை நாமே முன்னின்று நடத்தவேண்டும்.அதற்கு திருவலஞ்சுழியில் சபை உண்டாக்க வேண்டுமென்று உறுதிகொண்டேன்.மகான் நமக்குக்காட்டிய இடத்தை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தபடி 31.12.1986ல் வாங்கி பத்திரப்பதிவும் ஆனது அன்றிலிருந்து சபை உண்டாக்கும் பணியை துவங்கி சிறுகச் சிறுக 1990-91 கட்டிடம் கட்டி முடித்து அதில் சபை ஆரம்பித்து தியானம், சத்சங்கம், மகான் அவர்களின் விழாக்களும் துவங்கின.


சபை கட்டிமுடிக்க உடல் உழைப்பும்,பொருளுதவியும் தந்துதவிய அனைவருக்கும் என் நன்றியும் நல்லாசியும் எப்போதும் உண்டு.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கூட்டு தியானம்,பெளர்ணமி தோறும் மாதாந்திர கூட்டு தியானம் சத்சங்கம் தவறாமல் நடந்துவருகிறது.

 

அனைத்து மெய்யுணர்வு ஞான மலர்களும் நல்ல ஒத்துழைப்பு தருவதுடன் மெய்ஞான வாழ்வில் பயன்பட்டு வருகிறார்கள், நாளுக்கு நாள் புதிய மெய்யுணர்வாளர் சிஷ்யர்கள் கூடி சபை மேலும் வளர்ச்சிப்பெற்று வருகிறது பல ஊர்களிலும் நகரங்களிலும் திருவலஞ்சுழி சபையை மைய்ய இடமாகக்கொண்டு கிளை சபைகளும் இயங்கி வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துக்கொள்கிறேன்.

 

குண்டலினி பேறின்ப ஞான உபதேசம் பெறவிருப்பமுள்ளவர்கள் நேரில்வந்து சுலபமாக பெற்றுப்பயன் பெறலாம். சந்தோஷம்.

உலக சமாதான ஆலயம்
2/518, தஞ்சை மெயின் ரோடு,
திருவலஞ்சுழி 612302
கும்பகோணம் (Tk), தஞ்சை(Dt)
தமிழ்நாடு இந்தியா
போன்: 0435-2454166 செல்: 9442254166