உலக சமாதான ஆலயத்தின் உலக தத்துவம்

இருளே பூரணம் உயிர் இருப்பது இருளில்
உயிராய் இருப்பது தன் நினைவு
உயிரின் ஓத்தாசையுள்ளது தன்தொனி
உயிரின் பொருளாய் உள்ளது அக்கினி அல்ல ஜோதி
உயிரின் நிர்வாகி அறிவு
அடக்கமும் அணுவில் விரிந்ததும் அணுவால்
அறிந்ததும் அணுவினுள் ஆதி மெய்யுணர்வால்.

உலக சமாதான ஆலய சபையின் நோக்கம்

தன்னைத்தான் அறிந்து
தன் சக்தியை அபிவிருத்தி செய்து
அன்றாட வாழ்க்கையில் பிரயோகித்து
பேரின்பமாய் பிறவியின் பெரும் நோக்கைமுடித்து
ஜீவரூப ஐக்கிய முக்தி அடைதலே இச்சபையின் நோக்கம்

கடவுளின் தத்துவம் இருபதில், ஒன்பது பெரிய அம்சம், ஐந்து ஜிவராசி அம்சம், ஆறு அறிவு அம்சம், அவைகளாவன:-

பரஞ்ஜோதிமகான் அவர்களின் தவத்தால் விளைந்த ஞானமும் உலக தத்துவம் இருபதும் எல்லாவற்றிக்கும் இருப்பிடமாயுள்ளதும் சூழ்ந்திருப்பதும் இருள். இருளிலிருப்பவையாவும் ஆண்டவனின் அம்சம். அவை துணிவாயுள்ள ''நான்'' வியாபகமாயுள்ள நினைப்பு, வேகமாயுள்ள நாதம், வெளிச்சமாயுள்ள ஜோதி, ஜோதியில் பிரிந்த அணு, ஆகாயத்தில் உறைந்த நீர், நிலம், காற்று,நெருப்பாக வந்தமைந்துள்ளது, இந்த ஒன்பதிலிருந்து உருவாகியது நீர்வாழ்வன, நிற்பன ஊர்வன, பறப்பன, நடப்பன போன்றுள்ள ஜீவராசிகள். இதிலிருந்து உண்டாகியவை பரிசம்,சுவை,வாசனை,கேள்வி, பார்வை,யூகம் இவை சேர்ந்த ஜீவராசிகளில் மனித ஜீவராசியும் அடங்கும்.

இந்த இருபது தத்துவமும் வலம் இடமாக சுழன்று கொண்டே இருப்பதால்,உலகம் சுற்றுவதும் சுழல்வதும் உண்டாகிறது.இதில் ஏதாவது குறைந்தால் அல்லது கூடினால் கஷ்டம்,வியாதி,மறைவு.பூகம்பம்,மற்றவைகளும் உண்டாகி அழிந்து மாறும்.இதை அடிக்கடி ஆராய்ந்து நிர்வாகம் நடத்துவதே மனிதனின் கடமை.இதுதான் மனித உலகில் அனேக நிர்வாகங்களாக இயங்கி வருகின்றன.

மனித மூளை ஒன்றுக்கப்பால் ஒன்றாக ஆராய்ந்து வரும் வல்லமை தான் குருமகான் அவாகளின் மேற்காணும் முடிவு.

குண்டலினி தவம்

குண்டலினி தவம் சுகாதாரம்,பக்தி,யோகம்,தவத்தை கடந்தது குண்டலினி தவம். இதை நெற்றி,உச்சியின் அனுபவத்தால் ஏற்படும் பரிச உணர்ச்சியே பேரின்பமாகும்.இதைத்தான் மக்களுக்கு ஊட்டியும் உபதேசித்தும் வருகிறோம்.

முதல்படி,இரண்டாம் படி,மூன்றாம் படி என்று இருபத்திஓரு (21) நாட்களில் உணர்ச்சி மறவாமல் பழக்கத்திற்கு கொண்டுவரச் செய்வதே உபதேசமாகும்.

பயன்

மனநிம்மதியும்,சிலவியாதிகள்,மனக்கஷ்டம்தீர்ந்துஉடல்நலம்,

தைரியமும்,வயதின் வளர்ச்சி, அறிவின் மேல் நிலையாவும் தானே வந்தடைந்து சிறப்பிக்கும்.

குருபிரான் அவர்களை நேரில் தரிசித்து தன்னைத்தானே அறியும் பேரின்ப குண்டலினி உபதேசம் பெற்று சாதி மத பேத போத கட்சி சார்பற்று என்றும் சந்தோஷமாய் வாழலாம் வாழ்வீர் !!