பரஞ்ஜோதி மகான் அவர்கள் தாம் அனுபவித்தறிந்த ஞானத்தால் உலக மக்களுக்காற்றிய தொண்டுகளில் முக்கியமானவை சில.

image

 

1.மக்களில் பாகுபாடு இன்றி தன் பரிச தீட்சையால் அனைவருக்கும் பேரின்பம், பேறறிவு பெறச்செய்தது.

 

2.நெடுங்காலமாக மானுடம் வணங்கி போற்றித்துதித்து வரும் இயற்கை ''கடவுள்'' தத்துவத்தை உலகநாடுகளுக்கு நேரில் சென்று தமது பிரசங்கங்கள் மூலமாக விளக்கியதுடன் அதன் தொகுப்பாக ''நான் கடவுள்'' என்னும் தத்துவதவஞான நீதிநூலை எழுதி உலகுக்கு அர்ப்பணித்தது

 

3.தன்மீது அன்பு விஸ்வாசமும் கொண்ட மக்கள் சிஷ்யர்கள் எவராயினும் அவர்கள் எவ்வளவு தொலைவில் வசிப்பவராயினும் அவர்கள் துயரம் துன்பங்களை நுட்பமாக அறிந்து அவற்றை கடிதம், செய்தி, எண்ணம் இவைகளின் மூலமாகவோ நேர்முகமாகவோ உடனே நீக்கி மகிழச்செய்து கொண்டே இருப்பது, அவர்கள் நினைவில் சதா நிலைத்திருப்பது.

 

4.1941-42ல் இரண்டாவது உலக மகாயுத்தம் தீவிரமாக இருந்தபோத மகான் அவர்களின் நுட்ப அறிவால் உணர்ந்து 'V' என்ற எழுத்தை அச்சிட்டு மக்கள் பார்வைபடும் இடமெல்லாம் ஒட்டுங்கள் 28.07.1945ம் தேதி சண்டை நின்றுவிடும் என்றார்கள் அதன்படி யுத்தம் நின்றது சமாதான அறிக்கை அச்சிட்டு பிரதமர் ஸ்ரீ நேரு மூலம் காமன்வெல்த் மாநாட்டுக்கு அனுப்பிவைத்தார்கள்.


5.28.10.1962ல் இந்திய சீனா யுத்த நெருக்கடியின்போது இந்திய சீன நட்புறவு கலாசாரம் இவைகளை எடுத்துகூறி அண்ணன் தம்பி பாகப்பிரிவினையின் சிறு சண்டைபோல் இருந்து சகோதரர் சண்டை தீர்ந்து முத்தமிட்டு வாழ்வதுபோல் வாழ்வார்கள், அவசரப்பட்டு அரசியல் தலைவர்கள் சண்டையைப் பெரிதுபடுத்தாமல் இருக்கும்படியும் பொறுமை பாராட்டும்படியும் அறிக்கை விடுத்தார்கள் அதுபோலவே நிகழ்ந்தது.


6.04,05-02-1962ல் 8 கிரக சேர்க்கையால் உலகமே அழிந்துவிடும் என்ற பீதி உலகில் நிலவியபோது 8 கிரக சேர்க்கையால் யாருக்கும் எதற்கும் தீங்கு ஏற்படாது,மனிதன் கடமை உணர்ச்சியுடன் செயல் படுவானேயானால் என்றும் சமாதானம் நிலவும் என்று அறிவிப்பு செய்தார்கள் இது எல்லா நாளிதழ்களிலும் வந்தது.

 

7.04.11.1961 அணு ஆயுத சோதனை போது அறிக்கை தந்தார்கள்.இதுபோன்ற அனேக விஷயங்களைதான் மானசிகமாக அறிந்து அவ்வப்போது மக்களை காப்பாற்றியுள்ளார்கள்.